Temple Address: Thiyaganur – Pudhur, Thalaivasal, Salem District.
Call Us : +919443870122

சக்தி பீடங்களில் 52வது சக்தி பீடமாக மகாலட்சுமி அசரிரியை மூலம் அடையாளம் காட்டப்பட்ட இந்த ஸ்தலம் தாட்சாயணியின் ரத்தம் சொட்டிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தாட்சாயணி சிவபெருமான் மீது தீராத ஆசை கொண்டு அவரை மணந்தாள். ஆனால் அவரது தந்தை தக்க்ஷ பிரஜாபதி சுடலையில்(சுடுகாட்டில்) வீற்றிருக்கும் சிவனை மணந்ததில் சிறிதும் விருப்பமில்லை. எனவே ஈசனை அவர் வெறுத்தார்.அந்த நேரம் தான் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட யாகத்தில் கலந்து கொள்ள சிவனையும் தாட்சாயிண்யையும் அழைக்கவில்லை. இதை கேள்விப்பட்ட தாட்சாயிணி கணவரான சிவனிடம் இந்த விசயத்தை கூறுகிறார். அதில் தான் கலந்து கொள்ள விரும்புவதாக சொன்னார்.
சிவபெருமான் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் கேட்க மறுக்க சிவனும் தாட்சாயிணி அவதார நோக்கம் நிறைவேறும் நேரம் வந்ததை உணர்ந்து அவரை தடுக்கவில்லை. அழையா விருந்தாளியாக தக்க்ஷனின் யாகத்து செல்கிறார். மிகப்பெரிய அவமானத்தை சந்திக்கிறார். அதனால் அந்த யாகத்தை தடுக்க தானே யாகத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்கிறார்.இதை அறிந்து மிகவும் துயரமடைந்த சிவபெருமான் தாட்சாயிணி உடலை சுமந்தபடியே ஈரேழு உலகை சுற்றிவருகிறார்.ஈசனின் துயரை நீக்கவும் முக்தி அளிக்கவும் எண்ணிய நாராயணன் தேவியின் அங்கங்களை 51 துண்டுகளாக்கி பூமியில் விழ செய்தார். அவைகளே 51 சக்தி பீடங்களாகவும், ரத்தம் சொட்டிய பகுதிகளே இன்று நாட்டில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களாகும்.

மகாலட்சுமியின் மீது தீராத பக்திகொண்டு அனுதினமும் தாயின் திருநாமங்களை உச்சரித்து கொண்டே “மகாலட்சுமி உபசாகராவே மாறி ஜோதிடத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து ஜோதிடத்தில் உள்ள மக்களின் சந்தேகங்களையும், குழப்பங்களையும் நீக்கி பல்வேறு பட்டங்களையும் பாராட்டுகளையும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் பெற்று அங்கு வசிக்கும் மக்களுக்கு ஜோதிடம் வாயிலாகவும் ஆன்மீகம் மற்றும் தன்னம்பிக்கை கருத்துக்கள் வாயிலாகவும் வாழ்க்கையில் வெற்றியும் அதிர்ஷ்டத்தையும் அருளிவரும் “ஜோதிட ரத்னா”, “ஜோதிட கலாநிதி”, “ஜோதிட செம்மல்”, “மகாலட்சுமி உபாசகர்”, “சிற்ப சாஸ்திர கலாமணி” ஸ்ரீலஸ்ரீ Dr. ராம் பரிமளம் ஆச்சார்ய குருஜி அவர்களின் தீராத பக்தியும் ஆன்மீக திருத்தொண்டாலும் ஒரு நாள் அசரிரியை மூலம் தான் இங்கே குடி கொண்டு அருள்பாலிக்க விரும்புவதாக மகாலட்சுமி தெரிவிக்கிறார். சரியான இடம் தெரியாமல் தேடும் போது தானே அடையாளம் காட்டுவதாக தெரிவித்து கனவில் வந்து இந்த இடத்தை அடையாளம் காட்டுகிறார். மகாலட்சுமி காட்டிய இடமே இன்று ஆலயத்தின் கருவறையாக அமைந்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, தியாகனூர் புதூர் கிராமத்தில் வசிஷ்ட நதி கரைக்கு தெற்கே காமநாதீஸ்வரர் மற்றும் அஷ்டபைரவர் ஆலயத்திற்கு மேற்கே எழுந்தருளி பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளி அள்ளி தருகிறார். “பிரபஞ்ச நாயகி அனைத்துலக செல்வத்தின் அதிபதியான தாய் மகாலட்சுமி”.
குருஜி அவர்களின் வருகை
மாதந்தோறும் பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்று குருஜி அவர்கள் ஆலயத்தில் நேரடியாக சந்திக்கலாம். விசேஷ நாட்களிலும் அவரின் வருகை உண்டு.
ஆலயத்தின் சிறப்புகள்
மகாலட்சுமி 5 அடி உயரத்தில் இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கையில் அபய முத்திரையும், மற்றொரு கையில் வரத முத்திரையும் காண்பித்து வலது பாதத்தை பூமியில் தாங்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். சிவபெருமானை தன் அவதாரத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது நெற்றிக்கு மேலே கிரீடத்தில் லிங்க வடிவமாக தாங்கி காட்சி தருகிறார். மகாலட்சுமி தனது வாகனமான ஆந்தையை தனது வலது பாதத்தினருகே கொண்டு இருக்கிறார்.
மகாலட்சுமி தனது பின்புறத்தில் கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தானலட்சுமி, ஆதிலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமியுடன், அஷ்டலட்சுமியாக ஒரே நேரத்தில் தரிசிக்க காட்சி தருகிறார்.
மகாலட்சுமி தனது பின்புறம் நவகிரகங்கள் 9-ம் 12 ராசிகளின் அமைப்பும், 63 நாயன்மார்கள் ( நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து இறைவனை நேரடியாக பார்த்த சிவனடியார்கள்) தாமரை மொட்டுகளாகவும் நமக்கு காட்சி தருகிறார்கள்.
சூரியன் – சுக்கிரன் பரிகார ஸ்தலம்
அரசியல், சினிமா மற்றும் இதர கலை துறையை சார்ந்தவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள் என்பது அனுபவமான உண்மை. அரசியல், அரசு வேலை மற்றும் அரசு உயர் பதவிகளை குறிக்கும் சூரியன்(சிவலிங்கம்) மகாலட்சுமி கிரீடத்தில் விக்ரகத்தில் இயற்கையாகவே அமைய பெற்று இருப்பதால் அரசியலில் ஆர்வமுள்ளவர்கள், அரசியலில் ஏமாற்றம் அடைந்தவர்கள், சக்தி மிக்க நபராக உயர்வதற்கு இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும், 16 செல்வங்களும் என்பது இங்கு வந்து வழிபட்டு சென்றவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பல்வேறு பிரச்சனை, சிக்கல்களுக்கு பலவித எண்ணிக்கையில் தேங்காய் தீபமேற்றி வழிபாடு செய்வது இங்கே விசேஷமாகும்.
ஆலயத்தின் பிற தெய்வங்கள்
முத்துவிநாயகர்
பாலமுருகன்
குபேர வராஹி
மகாலட்சுமி பைரவர்
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்
ஸ்ரீ ஐயப்பன்
தன்வந்திரி பகவான்
பதஞ்சலி
ராகு – கேது
27 நட்சத்திரங்களுக்கு உண்டான மரங்கள் தனித்தனியே நட்டு “நட்சத்திர வனம்” இங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. தங்களின் நட்சத்திர மரத்தை தங்களின் குலதெய்வமாக நினைத்து பராமரிக்கவும் வழிபடவும் செய்கிறார்கள் என்பது இன்னும் தனிச்சிறப்பு.